சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை நாடாளுமன்ற தேர்தலுக்கு ரீ ரிலீஸ் செய்த திமுக; வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி

By Velmurugan sFirst Published Mar 20, 2024, 1:47 PM IST
Highlights

சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நாடாளுமன்ற தேர்தலுக்கும் அறிக்கையாக வெளியிட்டதனால் நாங்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற மாட்டோம் என்பதை திமுக நிரூபித்திருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக இன்று வெளியிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளையும் திமுக வெளியிட்டுள்ளது. இதனை விமர்சித்து பாஜக மாநலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது.

அருப்புக்கோட்டையில் காட்டு பகுதியில் கேட்ட அக்கா, தங்கையின் அலறல் சத்தம்; காமுகன்கள் வெறிச்செயல்

திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா?

வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு

இது போக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கும்  கொடுத்திருக்கிறது திமுக. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!