நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 இடங்களும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், கூட்டணிகளுடன் தொகுதி பங்கீட்டை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் அதிமுக தனது கூட்டணி கட்சியான தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
புதிய தமிழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அந்த வகையில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு இடையே ஓப்பந்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவில்லையென்றும், தனித்சின்னத்தில் போட்டியிட இருப்பதாக கூறினார்.
எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி
இதே போல எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தம் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் அதிமுக இடையே ஏற்பட்டது. மேலும் தேமுதிகவிற்கு அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது