பாமக பாஜக எனும் மூழ்கும் கப்பலில் ஏறியிருக்கிறது - செல்வப்பெருந்தகை விமர்சனம்

By Velmurugan s  |  First Published Mar 19, 2024, 1:21 PM IST

பாமக, பாஜக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், பாமக மூழ்கும் கப்பலில் ஏறியிருப்பதாக தமிழ் நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.


தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு ஜனநாயகம் இன்னும் மாண்டு போகவில்லை. அரசியலமைப்பை சிதைக்க முடியாது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. இதனை வரவேற்கிறோம்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஷ்பூ சொன்ன அதே கருத்தை மீண்டும் பிரதிபலித்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என சொல்கிறார்கள். இதை வன்மையாக காங்கிரஸ் பேரியக்கம் கண்டிக்கிறது. இந்த நிலைக்கு ஆளாக்கியது யார் என்பதை முதலில் நீங்கள் கூற வேண்டும். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உதவியோடு சோதனை என்ற பெயரில் 7 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளீர்கள். யார் பிச்சை எடுக்கிறார்கள் என்பதை நிர்மலா சீதாராமன் அறிந்து கொள்ள வேண்டும்.  

Tap to resize

Latest Videos

எங்கள் சாதி பெண்கள் மீது கை வைத்தால் கருவறுப்போம்; இணையத்தில் வைரலாகும் கொமதே கட்சி வேட்பாளரின் அணவ பேச்சு

அனைத்து ஆதாரங்களையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும். பாஜக அரசுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு மக்களுடைய வரி பணம் 24 லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது பாஜக அரசு. தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் பாஜகவை மன்னிக்க மாட்டார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மக்கள் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உரிமையை வழங்கியது காங்கிரஸ் பேரியக்கம்.

ஆனால் இப்பொழுது தகவல்களை கொடுக்க மறுக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் தகவல் கொடுப்பது மறுதலிக்கப்படுகிறது.  இவையெல்லாம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொடுங்கொள்  ஆட்சி நடத்துவது போல் மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் தேர்தல் வரும் போது  பதில் கூற வேண்டும். இந்தியா கண்டிராத,  இந்திய மக்கள் கேள்விப்படாத மாபெரும் நவீன விஞ்ஞான ஊழலை மோடி செய்திருக்கிறார்.

காஞ்சியில் பலகோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெற்றி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். பாமக மூழ்கும் கப்பலில் ஏறி இருக்கிறது. ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சூறாவளி சுற்றுப்பயணம் செய்யப் போகிறார்கள். இந்திய கூட்டணி சார்பில் 40 தொகுதிகளில் நிற்கக்கூடிய வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம் அவர்கள் இயந்திரங்களை நம்பி தேர்தலில் இருக்கிறார்கள் மக்கள் சரியான தீர்ப்பளிப்பார்கள் என்றார்.

click me!