Prakash Raj | 420க்கெல்லாம் 400 சீட் கேக்குதா..? பாஜக-வை வம்பிழுக்கும் பிரகாஷ் ராஜ்! | PM Modi | PJP

Published : Mar 19, 2024, 11:10 AM IST
Prakash Raj | 420க்கெல்லாம் 400 சீட் கேக்குதா..? பாஜக-வை வம்பிழுக்கும் பிரகாஷ் ராஜ்! | PM Modi | PJP

சுருக்கம்

மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என தேசிய ஜனநாயக கூட்டணி கூறி வருகிறது. இதனை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டன. 7 கட்டமாக நடைபெற உள்ள இந்த ஜனநாயக திருவிழாவின் முடிவாக வரும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் மும்முரமாக பிரச்சார வேலைகளை ஆரம்பித்துள்ளன. பாஜக முக்கிய பிரமுகரும், பிரதமருமான நரேந்திர மோடி ஏற்கனவே வட இந்தியாவில் பாதி சுற்றுப் பயனத்தை முடித்ததோடு, தற்போது தென்இந்தியாவிலும் சுறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பாஜக வெற்றிக் கணக்கு!

மீண்டும் மோடி என்ற கோஷத்தோடு வலம் வரும் பிரதமர் மோடி, இம்முறை தனிக் கட்சியாக 370 இடங்களுக்கு மேலும், கூட்டணிக் கட்சியாக 400 இடங்களுக்கு மேலும் வெற்றி பெறுவோம் என கூறிவருகிறார்.

பிரேமலதா விஜயகாந்த் மீது 3 பிரிவில் திடீர் வழக்கு பதிவு செய்த போலீசார்.! என்ன காரணம் தெரியுமா.?

பிரகாஷ் ராஜ் விமர்சனம்

பிரதமர் மோடியின் இக்கருத்தை, நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். அதாவது, மோசடி செய்தவர்களெல்லாம் 400 இடங்களுக்கு மேல் பிடிப்போம் என கூறிவருகிறார். இந்திய ஜனநாயக நாட்டில் எந்தவொரு தனிக் கட்சியாலும் 400 இடங்கள் பிடிக்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார். பாஜக, காங்கிரஸ், மட்டுமல்ல எந்தக் கட்சியானாலும் 400 இடங்களுக்கு மேல் பிடிப்போம் என்பதெல்லாம் ஆணவப் பேச்சு என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2024: திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது ஏன்.? அன்புமணி விளக்கம்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!