விரைவில் நடைபெறவிருக்கின்ற மக்களவை தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதேபோல திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் திருமதி. கனிமொழி கருணாநிதி, எம்.பி. அவர்கள் தலைமையில் 38 மாவட்டங்களில் இருந்து 1100 க்கும் மேற்பட்ட சங்கங்களை சந்தித்து அதன் வாயிலாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கருத்துக்களை பெற்றனர். இந்நிகழ்வுகளில் 50000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
- ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
- உச்ச நீதிமன்றக் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
- மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் அரசமைப்பு திருத்தப்படும்.
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
- ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படும்.
- அனைத்து மாநில மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும்.
- தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
- தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட வேலைநாட்கள் 150 ஆகவும், ஊதியம் ரூ.400 ஆகவும் உயர்த்தப்படும்.
- புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
- தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
- ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.
- விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.
- மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும்.
- நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலை உணவு
- பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.65 ஆக குறைக்கப்படும்.
- பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
- மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும்.
- ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை தாக்கல் செய்யப்படும்.
- சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்
- அனைத்து மாநில வளர்ச்சிக்கும் சம அளவு நிதி.
- புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்.
- நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கிடு உடனடியாக அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இவிஎம் மெஷின் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? முடியாதா? ஓர் அலசல்!