
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் சங்கத்தினர், திருவாரூர் மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில செயலாளர் பிரகாஷ் பங்கேற்றுப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “கருவூல அலுவலகத்தில் நிரப்பப்படாமல் இருக்க்கும் வெற்றுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கணக்கு நாள் குறைப்பினை கண்டிப்பது” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் சௌந்தரராஜன், மாவட்டத் தலைவர் பைரவநாதன், மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், மாவட்டப் பொருளாளர் மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ராஜ்குமார் நன்றத் தெரிவித்தார்.