வசூல் வேட்டை நடந்திய டாஸ்மாக்! அடுத்த டார்கெட் 50 ஆயிரம் கோடி!

By SG BalanFirst Published Mar 20, 2023, 4:02 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கடந்த ஓராண்டில் 45 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக நிதித்துறைச் செயலாளர் முருகானந்தம் கூறியுள்ளார்.

2023-24 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மகளிருக்கு மாதம் தோறும் உரிமைத்தொகை வழங்குவது உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது டாஸ்மாக் கடைகள் பற்றிய முக்கிய விவரங்களை வெளியிட்டார். கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் விற்பனை வாயிலாக  தமிழக அரசு ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியிருப்பதாகத் தெரிவித்தார். வரும் நிதியாண்டில் டாஸ்மாக் வசூலை ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tamil Nadu Budget 2023-24 Highlights : தமிழ்நாடு பட்ஜெட் 2023ன் முக்கிய அம்சங்கள் இதோ!!

தமிழக அரசுக்கு பல ஆண்டு காலமாக டாஸ்மாக் மூலம் குறிப்பிட்டத்தக்க அளவு வருவாய் கிடைத்து வருகிறது. இந்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே போகிறது. பண்டிகை நாட்களை ஒட்டி டாஸ்மாக் கடைகளில் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த நிதியாண்டில் தீபாவளி பண்டிகையை ஒட்டிய 2 நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.464.21 கோடி வசூல் செய்யப்பட்டது. புத்தாண்டு மற்றும் பொங்கலை ஒட்டிய நாட்களில் தலா ஆயிரம் கோடி ரூபாய் வசூலானது. இவ்வாறு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்துவருகிறது.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அவற்றில் கடந்த ஆண்டு இதே மார்ச் மாத காலகட்டத்தில் மதுபானங்களின் விலை சற்று உயர்த்தப்பட்டது. அதற்கெல்லாம் சளைக்காமல் குடிகார ஆசாமிகள் டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தமிழகம் எங்கும் உள்ள டாஸ்மாக் கடைகள் வசூல் வேட்டையில் திளைக்கின்றன.

என்னது... தகுதி உள்ளவங்களுக்கு மட்டுமா? அனைத்து மகளிருக்கும் ரூ.29,000 கொடுங்க! அண்ணாமலை அதிரடி

click me!