Tamil Nadu Budget 2023-24 Highlights : தமிழ்நாடு பட்ஜெட் 2023ன் முக்கிய அம்சங்கள் இதோ !!

By Raghupati R  |  First Published Mar 20, 2023, 1:40 PM IST

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு, மெட்ரோ ரயில் என பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசின் 2023ம் பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது.


தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

* இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம்.

Latest Videos

undefined

* தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ₹20 லட்சம் நிதியுதவி ₹40 லட்சமாக அதிகரிப்பு.

* இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ₹223 கோடி ஒதுக்கீடு.

* தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₹18,661 கோடி ஒதுக்கீடு.

*சென்னை கிண்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பன்னோக்கு மருத்துவமனை  இந்த ஆண்டே திறக்கப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிப்பு.

* ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு உதவித்தொகை.

* முதல்நிலை தேர்வுக்கு தயாராக மாதம் ரூ. 7,500, முதன்மைத் தேர்வுக்கு ரூ. 25,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.

* முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு.   அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் இந்தத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.  இத்திட்டத்தின் மூலம்  தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

* தமிழக போக்குவரத்து துறைக்கு புதிதாக 1000 பேருந்துகள் வாங்க, தமிழக பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* மகளிர் உரிமைத்தொகை தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும்.

* விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.  இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்.

* ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

இதையும் படிங்க..இலவச Wifi முதல் டெக் சிட்டி வரை.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன.?

* சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்.

* ₹4,236 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

* நடப்பு நிதியாண்டில் 574 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது; வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும்.

* பழனி , திருத்தணி, சமயபுரம் ஆகிய திருக்கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் ரூ. 485 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2% ஆக குறைக்க அரசு முடிவு.  

* அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ₹40 லட்சத்தில் இருந்து ₹50 லட்சமாக அதிகரிப்பு.

* அனைத்து துறைகளிலும் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க, பெண்களுக்கான தனி ஸ்டார்ட் அப் திட்டம் செயல்படுத்தப்படும்.

* தொன்மையான மதுரை புனித ஜார்ஜ் தேவாலயம், தஞ்சாவூர் ஸ்வார்ட்ஸ் தேவாலயம். சேலம் கிறிஸ்து தேவாலயம் உள்ளிட்டவை புதுப்பிக்கப்படும். புகழ்பெற்ற நாகூர் தர்காவை சீரமைக்க இவ்வாண்டில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* மகளிர் உரிமைத்தொகை தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும்.

* தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

* மதுரையில் ₹8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.  திருமங்கலம் - ஒத்தக்கடை பகுதிகளுக்கு இடையே மெட்ரோ தொட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.   

* கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும் - சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும்.

 * சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்.

* சென்னையில் ₹320 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு, நீர் வழித்தட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* வட சென்னை வளர்ச்சித்திட்டம் ₹1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

இதையும் படிங்க..மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம்.. தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் - அதிரடி அறிவிப்புகள்

click me!