இலவச Wifi முதல் டெக் சிட்டி வரை.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன.?

By Raghupati R  |  First Published Mar 20, 2023, 12:33 PM IST

தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் புதிதாக ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொழில்துறை, வேலைவாய்ப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவிப்புகளை பார்க்கலாம்.

* சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சியின் முக்கிய பொது இடங்களில் இலவச wifi சேவைகள் வழங்கப்படும்.

Tap to resize

Latest Videos

undefined

* தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக, சென்னை கோவை ஓசூர் TNTECH CITY அமைக்கப்படும்.

* தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் புதிதாக ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 32 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

* ரூ.420 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் சிப்காட் மூலம் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிங்க..மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம்.. தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் - அதிரடி அறிவிப்புகள்

* உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளன. இதற்காக ரூ100 கோடி ஒதுக்கீடு.

* கடந்த இரண்டுகளாக தமிழ்நாடு தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 3,59,000 பேருக்கு வேலை வாய்ப்பு, 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளன.

* 20 கோடி ரூபாய் செலவில் 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் உருவாக்கப்படும்.

* பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளது. இதை சரி செய்ய ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும்.

* பசுமை மின் வாகன உற்பத்தியில் தமிழக முதன்மை இடத்தில் உள்ளது.  கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில் 46 சதவிகிதம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதில் பெருமை.

* 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு இருக்கும் வகையில் பசுமை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு சிறப்பு நிறுவனம் ஒன்றை அரசு செயல்படுத்தும்.

* சேலத்தில் ரூ850 கோடி செலவு 119 ஏக்கர் நிலப்பரப்பில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.

இதையும் படிங்க..தமிழர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அறிவிப்பு - சுகாதாரத்துறை அறிவிப்புகள்

click me!