தமிழர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அறிவிப்பு - சுகாதாரத்துறை அறிவிப்புகள்

By Raghupati R  |  First Published Mar 20, 2023, 12:08 PM IST

மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 

* தமிழர் பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தொற்ற நோய்கள் தொடக்க நிலையில் கண்டறிய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. 

Latest Videos

undefined

* புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மக்களை தேடி மருத்துவத்தில் சலுகை வழங்கப்படும்.

*  'மக்களை தேடி மருத்துவம்' தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

* மாநில அரசின் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம், தொழிற்சாலைகள் மற்றும் அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

* முதல் கட்டத்தில், 711 தொழிற்சாலைகளில் 8.3 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பணியாளர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும்.

* இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஸ்கிரீனிங் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₹18,661 கோடி ஒதுக்கீடு.

* சென்னை கிண்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பன்னோக்கு மருத்துவமனை  இந்த ஆண்டே திறக்கப்படும்.

* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடகட்டமைப்பை  மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு.

* சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு மருத்துவப்பிரிவு புதியதாக அமைக்கப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிப்பு.

* கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆக அதிகரிப்பு.

* முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் குடும்பத்திற்கு 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 11.82லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம்.. தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் - அதிரடி அறிவிப்புகள்

click me!