மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம்.. தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் - அதிரடி அறிவிப்புகள்

By Raghupati RFirst Published Mar 20, 2023, 11:46 AM IST
Highlights

மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சட்டப்பேரவையின் இன்றைய அலுவல் பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்ததும்,  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.

“62 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை, 30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம் என்றும், இலக்குகளில் குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்றும் கூறினார். தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறைக்கு திட்டங்கள் கூறப்பட்டு அதற்கான பட்ஜெட் வாசிக்கப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

தாளமுத்து நடராசனுக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும். தமிழ் மொழி உலக மொழியாக திகழ பண்பாட்டு மாநாடு நடத்தப்படும். தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க பயணங்கள் ஊக்குவிக்கப்படும். தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியை வளர்க்க பண்பாட்டு தமிழ் மாநாடு நடத்தப்படும். 591 தமிழ் அறிஞர்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும். 

இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்

சங்கமம் கலை பண்பாட்டு திருவிழா மேலும் இரண்டு நகரங்களில் நடத்தப்படும். சென்னை சங்கமம் கலை விழா மேலும் 9 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.சோழப் பேரரசு புகழை உலகறிய செய்ய தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும். நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவித்தார்.

இதையும் படிங்க..ஒரு நாளைக்கு 50 செலுத்தினால் போதும்.. ரூ.35 லட்சம் ரிட்டன் கிடைக்கும் - அஞ்சலகத்தின் அருமையான திட்டம்

click me!