மத்திய அரசின் புதிய திட்டங்களை கண்காணிக்க அதிகாரி நியமனம்.. தலைமை செயலாளர் அறிவிப்பு..

Published : Feb 03, 2022, 08:28 AM IST
மத்திய அரசின் புதிய திட்டங்களை கண்காணிக்க அதிகாரி நியமனம்.. தலைமை செயலாளர் அறிவிப்பு..

சுருக்கம்

மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கான தொடா்பு அதிகாரியாக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்டாா்.

மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கான தொடா்பு அதிகாரியாக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்டாா்.

மத்திய அரசின் திட்டங்களை குறித்த காலத்துக்குள் விரைந்து செயல்படுத்தும் வகையிலும், அவை மக்களுக்குச் சென்றடைவதை அவா்கள் மூலமே ஆய்வு செய்யும் வகையிலும் புதிய முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.இதுகுறித்த தகவலை நீதிஆயோக் அமைப்பு மாநில முதல்வருக்குத் தெரிவித்தது. மேலும், திட்டங்கள் ஆய்வு போன்ற பணிகளுக்காக சில மாவட்டங்களும் தேர்வு செய்யப்பட்டன.

அதன்படி, ராமநாதபுரம், விருதுநகா், காஞ்சிபுரம், திருச்சி, கடலூா், கன்னியாகுமரி, வேலூா் மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தப் புதிய திட்டத்துக்கான தொடா்பு அதிகாரியாக முதன்மைச் செயலா் அந்தஸ்திலான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் நீதி ஆயோக் அமைப்பு கேட்டுக் கொண்டிருந்தது.

இதன் அடிப்படையில், அரசின் முதன்மைச் செயலாளா் மங்கத்ராம் ஷர்மா, தொடா்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை திட்ட இயக்குநர் பதவி வகித்து வந்த மங்கத்ராம் ஷர்மாவுக்கு கூடுதலாக சமூக சீரமைப்புத்துறை கடந்த ஜூன் மாதம் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய்யால் வந்த சிக்கல்.. இளைஞர்களுக்கு வலைவீசும் திமுக.. திருவண்ணாமலை மாநாடு சொல்வதென்ன?
பாம்பும், கீரியுமாக ஆதவ் அர்ஜுனா vs புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் அதிகார மோதல்.. விஜய்க்கு தலைவலி!