நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு இன்றியமையாததது… ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!!

By Narendran S  |  First Published Nov 29, 2022, 10:44 PM IST

நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு இன்றியமையாததது என்று  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 


நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு இன்றியமையாததது என்று  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், இந்தியாவின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இட்ட பெருமை தமிழகத்தை பெரிதும் சாரும். புத்தக அறிவு மட்டும் மாணவர்களுக்கு போதாது. திறன் கொண்ட கல்வியே மாணவர்களை முழுமையாக்கும். அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். கற்பிக்கும் முறை தற்போது மாறி வருகிறது. பழைய கற்பிக்கும் முறை போதுமானது இல்லை. மாணவர்கள் என்பவர்கள் ஆலமர விதை போன்றவர்கள்.

இதையும் படிங்க: சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரத்து... மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!!

Tap to resize

Latest Videos

அதை கண்டறிந்து பெரிய மரமாக வளர ஆசிரியர்கள் உதவிட வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு இன்றியமையாததது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை நாடு நீண்டகாலமாக அறிந்துள்ளது. தாய்மொழியில்தான் அறிவை வளர்க்க முடியும். திருக்குறள் அனைத்து மாநில பாடத்திட்டத்திலும் வைக்கப்பட வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் தமிழ்மொழியை 2 ஆவது மொழியாக கொண்டு வர அம்மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளேன்.

இதையும் படிங்க: நியாய விலைக் கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டம்… திடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து தமிழக அரசு விளக்கம்!!

அதே போல் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு 13 இந்திய மொழியில் திருக்குறளை வெளியிட்டார். இது தமிழுக்கு பிரதமர் செய்த பெருமிதம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.  

click me!