ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக விமானி..! சோகத்தின் மூழ்கிய தேனி மக்கள்

By Ajmal KhanFirst Published Mar 17, 2023, 10:30 AM IST
Highlights

அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த்-ன் உடல் இன்று பெரியகுளம் ஜெயமங்கலத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

ஹெலிகாப்டர் விபத்து

அருணாச்சலப் பிரதேச மாநிலம் மண்டாலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான CHEETHA ஹெலிகாப்டர் நேற்று விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் அவருடன் சென்ற மற்றொரு வீரரும் உயிரிழந்தனர். அஸ்ஸாமில் உள்ள விமானப்படை பயிற்சி முகாமில் இருந்து ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்ட போது மேஜர்ஜெயந்த் மற்றும் கமாண்டர் ரெட்டி ஆகியோர் இந்த விபத்தில் பலியானது தெரிய வந்தது. இதில் மேஜர்ஜெயந்த் என்பவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயமங்கலம் ஊராட்சி வ.உ.சி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் பிள்ளை மற்றும் மல்லிகா தம்பதிகளின் மகனான மேஜர் ஜெயந்த்-திற்கு 37 வயது ஆகிறது.செல்லா என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த ஜெயந்த்-திற்கு இதுவரை குழந்தைகள் இல்லை.

சோகத்தில் தேனி மக்கள்

பணிக்கு சென்ற இடத்தில் ஹெலிஹாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஜெயமங்கலம் கிராமத்திற்கு மட்டுமல்லாது தேனி மாவட்ட மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் உடல்களும் நேற்று டெல்லி விமானப்படை தலைமையகம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் வீரர் ரெட்டியின் உடல் டெல்லியில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட  நிலையில்,மேஜர் ஜெயந்த்-ன் உடல் விமானம் மூலம் மதுரை அல்லது திருச்சி கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பெரியகுளம் அருகே உள்ள ஜெயந்த்-ன் சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

இதையும் படியுங்கள்

Indian Army helicopter crash: அருணாச்சலில் சீட்டா ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 வீரர்கள் உயிரிழப்பு!!
 

click me!