இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு கோடை வெயிலின் தாக்கத்தை நேற்று வந்த திடீர் மலாய் போக்கியது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகப்படியாக இருந்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனல் பறக்கும் வெயிலின் தாக்கம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டோ, கோடைக்காலம் ஆரம்பித்த நாள் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வெயிலின் தாக்கத்தால், சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் பல மாவட்டங்கள் 100 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பத்தை உணர்வதால், மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். நேற்று தமிழகத்தின் சில இடங்களில் பெய்த திடீர் மழை கோடை வெப்பத்தை போக்கியது என்றே கூறலாம்.
இதையும் படிங்க..ஃபர்ஸி வெப் சீரிஸை போல ரோட்டில் பணத்தை வீசிய பிரபல யூடியூபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க..கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கணவன்.. வீடியோ எடுத்த மனைவி.. என்ன நடந்தது.?