100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய உயர்வு! ஏப்.2-ம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிப்பு

By SG BalanFirst Published Mar 30, 2023, 6:22 PM IST
Highlights

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை 294 ரூபாயாக உயர்த்தப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தின்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 294 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.

வீடுகள்

கடந்த 2 ஆண்டு திமுக ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் ரூ.190 கோடி செலவில் 149 சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரம் மேம்பட ரூ.1000 கோடியில் தனிநபர் சமுதாய சொத்துக்கள் உருவாக்கப்படும். ரூ.1,500 கோடி ஒதுக்கீட்டில் விளிம்புநிலை மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அட்சய பாத்திரம் திட்டத்தில் ஊழலா? ஆளுநரிடம் விளக்கம் கேட்கும் நிதியமைச்சர்!

பள்ளிகள்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தொடக்கப் பள்ளிகளில் ரூ.154 கோடி செலவிட்டு 2,043 புதிய சத்துணவு கூடங்கள் கட்டப்படும். 2,500 ஊராட்சிகளில் நடைபெறும் பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கி பணிகள் நிறைவேற்றப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும்.

பெண்கள்

ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 66,130 தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் 3,600 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். 10.50 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.134 கோடி மதிப்பில் முருங்கை கன்றுகள் வழங்கப்படும். நமக்கு நாமே திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கப்படும்.

சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்: 22 நிமிடம் முன்பாக வந்து அசத்தல்!

click me!