அட்சய பாத்திரம் திட்டத்தில் ஊழலா? ஆளுநரிடம் விளக்கம் கேட்கும் நிதியமைச்சர்!

By SG BalanFirst Published Mar 30, 2023, 4:37 PM IST
Highlights

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அட்சய பாத்திரம் திட்டத்துக்கு ஆளுநர் மாளிகை நிதி வழங்கப்பட்டது பற்றி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அட்சய பாத்திரம் திட்டத்துக்காக சிஏஜி விதிமுறைகள் மீறிப்பட்டுள்ளதாவும் இதுபற்றி ஆளுநர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தின்போது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘’2018-19 நிதி ஆண்டில் ஆளுநர் மாளிகைக்கான நிதி ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டது. அந்த நிதி ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்தபோது, 5 கோடி ரூபாயில் ரூ.4 கோடி அட்சய பாத்திரம் திட்டத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஒரு கோடி ரூபாய் கண்ணுக்குத் தெரியாத கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது" என்றார்.

ஆபாசப் படம் பார்த்து சிக்கிய மற்றொரு பாஜக எம்எல்ஏ! இந்த முறை திரிபுரா சட்டப்பேரவையில்!

ஆளுநர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ரீதியில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கைப் பார்த்தால் அச்சம் ஏற்படுகிறது. இதில் சிஏஜி விதிகள் மீறிப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டினார். இதுபோன்ற திட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்ற அவர், ரூ.5 கோடியை மறைமுகமாக எடுத்துக்கொள்வது நல்ல திட்டமே அல்ல எனவும் ஆளுநர் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நிதி அமைச்சர் வலியுறுத்தினார்.

இதைப்போன்ற திட்டங்களில் அரசு கஜானாவிலிருந்து நேரடியாகச் செலவு செய்வதுபோல மாற்றி அமைப்பதே சரி எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறுக்கீட்டு எதிர்ப்பு தெரிவித்தார். "ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டதைக் கொச்சைப்படுத்துகிறீர்களா? நீங்கள் சொன்னால் சரி. நாங்கள் சொன்னால் தப்பா?" என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினர். அப்போது சபாநாயகர் தலையிட்டு, இந்த விவகாரம் தொடர்பான ஆதாரத்தைச் வெளியிட நிதியமைச்சர் பொறுப்பு ஏற்கிறார் எனத் தெரிவித்தார்.

அட்சய பாத்திரம் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அப்போது பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தார்.

வணிகப் போட்டி வழக்கில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,338 கோடி அபராதம் கட்டாயம்

click me!