Tamilnadu : வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர தடையா ? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

By Raghupati R  |  First Published Dec 20, 2021, 7:51 AM IST

ஒமிக்ரான் அச்சம் காரணமாக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அமைச்சர் மா. சுப்ரமணியன்.


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், ‘தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளின் திறப்பு விழா நிகழ்ச்சி ஜனவரி 12ல் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமரும் , முதல்வரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்தில் 2286 ஆரம்பசுகாதார நிலையங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Latest Videos

undefined

மக்களை தேடி மருத்தும் திட்டத்தின் கீழ் தற்காலிக செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு மதிப்பெண் கல்வி உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து மதிப்பெண் வழங்கப்படும் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு 20மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது.  69% இட ஒதுக்கீட்டின் படி 7296 பணியிடங்களும் நியமிக்கப்பட்ட பின் வெளிப்படையாக ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வளவு பேர் இந்த தற்காலிக பணியிடங்களில் நியமிக்கப்படுகிறார்கள் என்ற விபரம் இடஒதுக்கீட்டிற்கு பாதகம் வராமல் நியமிக்கப்பட்ட பின் பட்டியல் வெளியிடப்படும்.

ஒமிக்ரானை பொறுத்தவரை ஹை ரிஸ்க்நாடுகளிலிருந்து வருபவர்களை விட,  பிற நாடுகளில் இருந்து வருபவர்களுக்குதான் அறிகுறிகள் தற்பொழுது அதிகம் தென்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில்  எஸ் டிராப் வகை பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 28லிருந்து 33ஆக உயர்ந்துள்ளது.வெளி நாடுகளிலிருந்து வருபவர்களும் கவனமாக இருக்கவேண்டும்.பொது இடங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயம் எனக்கூறியுள்ளோம். 

ஒரு சில நாடுகளில் கட்டாயப்படுத்துகிறார்கள். தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மனசாட்சிக்கு பயந்து அவர்களாகவே தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.அது நம்மையும் பிறரையும் பாதுகாக்கும். ஒமிக்ரான் அச்சம் காரணமாக முற்றிலுமாக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும்  வெளி நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்ய முடியாது என தெரிவித்தார்.

click me!