TN Corona : தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு.!

By Raghupati RFirst Published Jun 1, 2022, 11:52 AM IST
Highlights

Tamilnadu corona : தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025ஆக உள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல் தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 542  பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 500ஐ கடந்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. 

எனவே நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 22ஆக இருந்த பாதிப்பு, தற்போது 100ஆக பதிவாகி வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு  இருப்பதால் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : BJP : அண்ணாமலை மீது திடீர் வழக்குப்பதிவு.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை - பாஜகவில் உச்சகட்ட பரபரப்பு !

இதையும் படிங்க : UGC: இந்த பல்கலை., பட்ட படிப்புகள் இனி செல்லாது..’யுஜிசி’ சொன்ன அதிர்ச்சி தகவல் ! மாணவர்கள் கதி ?

click me!