அமலாக்கத்துறை கைது அடுத்து, இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் அவர் அமைச்சரவையில் தொடர்ந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் காரணம் காட்டி செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக தமிழக ஆளுநர் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். இதனால், அவர் அமைச்சராக பொறுப்பு வகித்த இலாக்காக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு அமைச்சர்களுக்கு பிரித்து கொடுத்தார். அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும் வழங்கபட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் மாற்றம்... ஜூலை 3ஆம் தேதி பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை
ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதை தடுக்கிறார்.
தற்போது அமலாக்கத்துறை விசாரித்து வரும் குற்ற வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேலும் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. செந்தில் பாலாஜி அமைச்சர்வையில் நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாகப் பாதிக்கும், மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற அச்சங்கள் உள்ளன. இந்நிலையில், மாண்புமிகு ஆளுநர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கியுள்ளார்.
இவ்வாறு ஆளுநரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சுனிதா விஸ்வநாத் யார்? அமெரிக்காவில் ராகுல் காந்தியை சந்தித்த பின் சர்ச்சையில் சிக்கியது ஏன்?
முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து
இந்த உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க அதிகாரம் கிடையாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த உத்தரவை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளார். ஆளுநர் தனது கடமையை உணர்ந்து நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செந்தில் பாலாஜி வகித்த அமைச்சரவை இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்ற ஒப்புதல் கோரி ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியபோது, அதனை ஏற்காமால் திருப்பி அனுப்பினார். பரிந்துரை கடிதத்தில் செந்தில் பாலாஜி கைது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும் கூறி இருந்தார். பின்னர் இரண்டாவது முறையாக செந்தில் பாலாஜி கைது குறித்து குறிப்பிட்டு அனுப்பிய பரிந்துரையைத்தான் ஆளுநர் ரவி ஏற்று ஒப்புதல் வழங்கினார்.
செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த நீதிபதி..! நீதிமன்ற காவலை நீட்டித்து அதிரடி உத்தரவு