தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்... இதுதான் கோரிக்கையாம்...

 
Published : Jun 06, 2018, 10:50 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்... இதுதான் கோரிக்கையாம்...

சுருக்கம்

Tamilnadu Government Staff Association demonstrated at Perambalur ...

பெரம்பலூர்
 
பணியாளர் சீர்திருத்த குழுவை ரத்து செய்ய கோரி பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், "தமிழக அரசு நியமித்துள்ள பணியாளர் சீர்திருத்த குழுவை ரத்து செய்ய வேண்டும்" என்று முழக்கங்களை எழுப்பினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சர்பூன்னிசா, செல்வமணி, தியாகராஜன், வாசுகி உள்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சவீதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் தயாளன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சின்னதுரை நன்றி தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!