தூத்துக்குடிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்த விஜய்; இது தான் எங்க விஜய் பெருமை கொள்ளும் ரசிகர்கள்;

 
Published : Jun 06, 2018, 10:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
தூத்துக்குடிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்த விஜய்; இது தான் எங்க விஜய் பெருமை கொள்ளும் ரசிகர்கள்;

சுருக்கம்

this famous star meets the people who suffered during protest

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மக்கள் போராடிய போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு, 13 அப்பாவி மக்கள் பலியாகினர். ஜனநாயக படுகொலையாக கருதப்படும் இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் தூத்துக்குடிக்கு சென்று, மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

தற்போது நடிகர் விஜய் தூத்துக்குடிக்கு சென்று, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறி இருக்கிறார். ஊடகங்களில் வெளிச்சத்தில் படாமல் தன் வரவு அமைய வேண்டும் என விரும்பிய அவர், ரகசியமாக  வந்து சென்றாலும், விஜயின் இந்த வரவு இப்போது வைரலாகி இருக்கிறது.

விஜய் தூத்துக்குடிக்கு சென்று, அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டிற்கு, தனது ரசிகர் ஒருவருடன் பைக்கில் அமர்ந்து செல்லும் வீடியோ, இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. மற்றவர்களை போல அல்லாமல் விஜய் நடந்து கொண்ட விதம், அப்பகுதி மக்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்திருக்கிறது .இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட நபர் ஒருவர்” விஜய் தம்பி எங்க வீட்டுக்கு வந்து சென்ற விதம், சொந்த மகன் நடந்து கொண்டது போல ஆறுதலாக இருந்தது” என தெரிவித்திருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!