அரசு பேருந்தில் ஏதாவது குறையா? அப்படினா 149-க்கு கால் பண்ணுங்க.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

Published : Nov 10, 2023, 06:43 AM IST
அரசு பேருந்தில் ஏதாவது குறையா? அப்படினா 149-க்கு கால் பண்ணுங்க.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

சுருக்கம்

தீபாவளி பண்டிகைக்கு முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் 11ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்து மூலம் பயணிப்பவர்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகைக்கு முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் 11ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் சானடோரியம்,  பூந்தமல்லி ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பேருந்து மூலம் பயணிப்பவர்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க;- அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.. எந்த துறைக்கு தெரியுமா? அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா உதவி மைய எண் “1800 599 1500” என்ற 11 இலக்க எண் கடந்த 09.03.2023 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு தற்போது உபயோகத்தில் இருந்து வருகிறது.

பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த 11 இலக்க உதவி மைய எண்ணை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், வருகின்ற “10.11.2023” முதல் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் (149) அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேற்படி மூன்று இலக்க புதிய உதவி மைய எண் 149-ஐ தொடர்பு கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வேலைக்கு போற அவசரத்துல இதை மறந்துடாதீங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
Tamil News Live Updates 07 December 2025: கருப்பு - தங்க நிறத்தில் மின்னும் ஸ்பெஷல் RDX எடிஷன்.. டிவிஎஸ் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்