வெள்ளத்தில் தென் மாவட்டங்கள்... பிரதமரைச் சந்திக்க நேரம் கோரிய முதல்வர் ஸ்டாலின்

By SG Balan  |  First Published Dec 18, 2023, 2:53 PM IST

தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியைச் நேரில் சந்திக்க நேரம் கோரியுள்ளார்.


தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியைச் நேரில் சந்திக்க நேரம் கோரியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Tap to resize

Latest Videos

"தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை புதுதில்லியில் சந்திக்க நேரம் கோரியுள்ளார்.

தென் மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ரயில் சேவைகள் ரத்து

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும்,

நாளை (19.12.2023) புதுதில்லியில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்திக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்."

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

click me!