திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உதவி தேவைப்படும் மக்கள் 1070 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு அவசர கால கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இந்த எண்களைத் தொடர்புகொண்டு உதவி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உதவி தேவைப்படும் மக்கள் 1070 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம். 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண் மூலமும் தொடர்புகொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை: வாட்ஸ் அப், ட்விட்டரில் உதவி கோரலாம் - தமிழக அரசு!
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் உதவி பெற 1077, 97865 66111, 0462-2501012 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களும் உதவி தேவைப்பட்டால் 1077 மற்றும் 0461-2340101 ஆகிய எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்னும் 12 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என்று சொல்லப்படுகிறது.
கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்கள்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்- எடப்பாடி