கடலில் பேனா வேண்டாம்: மீனவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

By SG BalanFirst Published Feb 8, 2023, 12:06 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு ரூ.81 கோடி செலவில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திலும், கடற்கரையில் இருந்து 360 மீ தூரத்திலும் என 650 மீட்டர் பாலமும் அமைக்கப்பட உள்ளது.

இத்திட்டத்துக்கு தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்தது. ஆனால், இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் கடலில் அமைக்கப்படுவதால் கடல் மாசுபாடுக்கு வழிவகுக்கும் என்றும் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இதனை எதிர்த்துப் பேசியுள்ளனர். ஆனால், திமுகவினர் கலைஞருக்கு கடலில் பேனா சின்னம் அமைத்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் சார்பில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடல் வளங்கள் பாதிக்கப்படும் என்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகும் என்றும் குறிப்பிட்டு பேனா சின்னம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது மனுவில் கூறப்பட்டுள்ளது.

Millet khichdi: 7 நிமிடத்தில் சிறுதானிய கிச்சடி! பிரதமர் மோடிக்கு அமைச்சர் புகழாரம்!

ஏற்கெனவே சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் மீனவர்களின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பூவுலகின் நண்பர்கள் சூற்றுச்சூழல் அமைப்பு இத்திட்டம் பற்றி கூறியபோது, இந்த பேனா சின்னத்தை கடலில் அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது. அவருடைய நினைவிடத்திலோ, அவர் உருவாக்கிய தலைமை செயலகத்திலோ, மதுரையில் அமைக்கப்படும் கலைஞர் நூலகத்திலோ பேனா நினைவுச் சன்னம் அமைக்கலாம் என்றும் அந்த அமைப்பு பரிந்துரை செய்திருக்கிறது.

இவ்வாறு ஏற்கெனவே சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்ப்பு நிலவும் சூழலில் தமிழக மீனவர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது பேனா நினைவுச் சின்னத்துக்கான எதிர்ப்பை வலுப்படுத்துவதாக அமைகிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மகன் அடிமையானதால் பறிபோன தாயின் உயிர்.. சென்னையில் நடந்த சோகம்..!

click me!