பாஜகவின் புதிய 1008 பூத் கமிட்டிகள்: நாளை காலை கொடியேற்றும் அண்ணாமலை!

Published : Aug 24, 2023, 06:40 PM IST
பாஜகவின் புதிய 1008 பூத் கமிட்டிகள்: நாளை காலை கொடியேற்றும் அண்ணாமலை!

சுருக்கம்

பாஜக அமைத்துள்ள 1008 புதிய பூத் கமிட்டிகளில் நாளை காலை கொடியேற்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது

பாஜக கடந்த சில மாதங்களாக நடத்திய பூத் வலிமைப்படுத்தும் பணிகளின் மூலமாக புதியதாக 1008 பூத் கமிட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனை கொண்டாடும் வகையில், 1008 புதிய பூத் கமிட்டிகளிலும் நாளை காலை கொடியேற்றும் நிகழ்வு ஒரே நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலில், மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் புரவிப்பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழகத்தில் பாஜக ஏற்கனவே தடம் பதித்த கொங்கு மற்றும் தென் மாவட்டங்களை தாண்டி தற்பொழுது பாஜகவிற்கு சவாலான பகுதிகள் என அறியப்பட்ட சென்னை சுற்று வட்டார மாவட்டங்களிலும் ஆழமாக வேர் விட்டு வளரத் துவங்கியுள்ளது.

ஏனெனில் 1957 ஆம் ஆண்டு திமுக முதன் முதலில் போட்டியிட்ட தேர்தலில் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் சென்னை, செங்கல்பட்டு, வடஆற்காடு தென்னார்க்காடு மாவட்டங்களில் மட்டுமே 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திராவிட சித்தாந்தத்தில் மூழ்கி சீரழிந்து போயிருந்த இந்தப் பகுதிகளில் தேசிய சிந்தனை மெல்ல வலுப்பெற்று வருகிறது.

அதன் சாட்சியாக பாஜக அமைப்பு ரீதியான விழுப்புரம் பெருங்கோட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களில் உள்ள 9497 வாக்குச்சாவடிகளில் பாஜக காரிய கருத்தர்களின் கண்துஞ்சா பணிகளின் காரணமாக ஏற்கனவே, 6094 வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று கட்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

திமுக மீது நீதிபதி பாகுபாடு காட்டக் கூடாது: ஆர்.எஸ்.பாரதி சரமாரி குற்றச்சாட்டு!

மேலும், பாஜக அமைப்பு இது வரை இல்லாத 3403 வாக்குச்சாவடிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் பூத் வலிமைப்படுத்தும் இயக்க பணிகளின் மூலமாக புதியதாக 1008 பூத்கள் இந்த பகுதிகளில் கட்சி அமைப்புகளில் கொண்டு வரப்பட்டு அந்த பூத்துகளில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனை சாதித்துக் காட்டிய அத்தனை காரியத்தர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு சார்பில் பாராட்டுக்கள்.

புதியதாக கட்சி அமைப்பில் இணைக்கப்பட்டுள்ள 1008 பூத்களிலும், பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதை கொண்டாடும் வகையில், புதியதாக இணைக்கப்பட்டுள்ள 1008 பூத்களிலும் 1008 கொடிக்கம்பங்களில் பாஜக கொடியேற்றும் நிகழ்வு வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி (நாளை) காலை 10 மணி அளவில் அனைத்து பூத்களிலும் ஒரே நேரத்தில் நடைபெற இருக்கிறது. இதனை மாநிலத் தலைவர் அண்ணாமலை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவளம் பகுதியில் முதல் கொடியை ஏற்றி துவக்கி வைக்கிறார்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மிகவும் ஆபத்தானவர் உதயநிதி.. கொள்கையில் உறுதியுடன் இறங்கி அடிக்கிறார்.. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது.. அமித் ஷாவுக்கு சவால் விட்ட ஸ்டாலின்