பிரதமர் மோடி எதற்காக அப்படி பேசினார் தெரியுமா? முதல்வருக்கு அண்ணாமலை கொடுத்த விளக்கம்..

Published : May 21, 2024, 09:10 PM IST
பிரதமர் மோடி எதற்காக அப்படி பேசினார் தெரியுமா? முதல்வருக்கு அண்ணாமலை கொடுத்த விளக்கம்..

சுருக்கம்

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி. ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.

வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்திற்குள்ளும், வெளியிலும் நடக்கும் சம்பவங்கள் குறித்து எதுவுமே அறியாமல், நிலைய வித்வான்கள் சூழ்ந்த குழிக்குள்ளே வசிக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடி  அவர்கள், ஒடிசாவில் பிரச்சாரத்தின் போது பேசியதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது துரதிர்ஷ்டவசமானது.

மக்களை இனம், மதம், மொழி மற்றும் சாதியின் பெயரால் பிளவுபடுத்துவதில், திமுக நிபுணத்துவம் வாய்ந்தது என்பதையும், அந்தப் பிரிவினையை  ஒதுக்கி வைப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்பதையும், முதலமைச்சருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

விமான விபத்துகளில் உயிரிழந்த உலகின் மிக முக்கிய தலைவர்கள்.. யார் யார் தெரியுமா.?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!