ஆவின் மீது முதல்வருக்கு திடீர் பாசம் ஏன்? அறிக்கை விட்ட பாஜக தலைவர் அண்ணாமலை

By SG BalanFirst Published May 25, 2023, 5:34 PM IST
Highlights

தினசரி பால் கொள்முதலை அதிகரித்து, பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்படச் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்த அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கமான ஆவின், பால் விற்பனையில் ஏகபோகத்துடன் செயல்பட்டு வருகிறது. குஜராத்தின் அமுல் நிறுவனம் தமிழகத்தில் விற்பனையைத் தொடங்க இருப்பதாகவும், அதனால் ஆவின் நிறுவனம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் என சர்ச்சை எழுந்திருக்கிறது.

இந்நிலையில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "தினசரி பால் கொள்முதலை அதிகரித்து, பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்படச் செயல்படுத்துவதிலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக சார்பாக வலியுறுத்துகிறோம்" என அண்ணாமலை கூறியுள்ளார்.

இரவு நேரங்களில் காம வெறி பிடித்து அலைத்த வாலிபர்! 30 பெண் குழந்தைகளை கொன்ற வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

மேலும் 'ஆவின் நிறுவனம் மீது முதல்வரின் திடீர் பாசம்?' என்ற தலைப்பில் ஓர் விலாவரியான அறிக்கையையும் இணைத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

திமுக ஆட்சியின் தொடர் தோல்விகளை மறைக்க, நாளொரு நாடகம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு ஆண்டு காலமாக, திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு நிறுவனங்களைப் புறக்கணித்து வரும் திமுக, தற்போது ஆரம்பித்திருக்கும் புதிய நாடகம் தமிழகத்தில் அமுல் நிறுவனம் வருவதை தடுக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் திரு அமித் ஷா அவர்களுக்கு எழுத்துப்பட்ட கடிதமும் ஆவின் நிறுவனம் மீதான போலி அக்கறையும்.

தினசரி பால் கொள்முதலை அதிகரித்து, பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்படச் செயல்படுத்துவதிலும் தமிழக முதல்வர் திரு அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று சார்பாக வலியுறுத்துகிறோம்.

அறிக்கை:…

— K.Annamalai (@annamalai_k)

அரசு ஊழியர்களுக்கான தீபாவளி இனிப்புகள் வழங்க, முதலில் தனியார் நிறுவனத்திடம் இருந்து இனிப்புப் பெட்டிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் இட்டிருந்த திமுகவின் இரட்டை வேடத்தை, தமிழக பாஜக முற்றிலும் அம்பலப்படுத்தியதால், வேறு வழியின்றி, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஆவின் நிறுவனத்திடம் இருந்தே இனிப்புக்கள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டாரா?

பாலூட்டும் தாய்மார்களுக்கான சத்துணவு தொகுப்பு ஏலத்தில், சத்துப் பால் பொடி தயாரிக்க ஆவின் முன்வந்த போதிலும் அதை பரிசீலிக்காமல், தனியார் நிறுவனத்துக்குத் தாரை வார்த்ததை திமுக அரசு மறுக்க முடியுமா?

தமிழ்நாட்டில் தினமும் 244 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வது தினமும் 35 லட்சம் லிட்டர் மட்டுமே. அதாவது, மாநிலத்தின் மொத்த பால் உற்பத்தியில், வெறும் 14% மட்டுமே, அரசு நிறுவனமான ஆவின் கொள்முதல் செய்கிறது. மேலும், 2021 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு சராசரி பால் கொள்முதல் 32 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளதாகப் புகார்கள் உள்ளன.

அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் சிறிதளவும் ஈடுபடாமல், திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின், மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தினசரி பால் கொள்முதலை அதிகரித்து, பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்படச் செயல்படுத்துவதிலும் கவனத்தைச் செலுத்தாமல், வழக்கமான திசைதிருப்புதல் நாடகங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சரை, தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்

இரவில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் போர் விமானத்தை தரையிறக்கி இந்திய கடற்படை சாதனை

click me!