9 ஆண்டுகள் நம்ம வீட்ல சாப்பிட்டு இப்ப காரம்னு சொல்றாங்க.. அண்ணாமலை யார சொல்றாருன்னு கவனிச்சீங்களா?

By Ramya s  |  First Published Jan 13, 2024, 12:10 PM IST

கூட்டணியில் இருந்து வெளியேறிய விவகாரத்தில் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 


கூட்டணியில் இருந்து வெளியேறிய விவகாரத்தில் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜக மாநிமாவட்ட மண்டல நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட செயல் வீரர்கள் கூட்டம் சோழிங்கநல்லூரில் நேற்று நடைபெற்றது. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணை தலைவர்கள் விபி துரைசாமி, நாராயணன் திருப்பதி, கரு நாகராஜன் உள்ளிட்ட பலர் கலண்டு கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ர தேர்தல் பணி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, அதிமுகவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசினார். அப்போது “ நாம் வீடு கட்டியிருக்கிறோம். கிரஹபிரவேசத்துக்கு கூப்பிட்டோம். எல்லோரும் வந்தார்கள் சாப்பிட்டார்கள். சிலர் சாப்பிட்டுவிட்டு கிளம்பி விடுவார்கள் அது இயற்கை தான்.

Tap to resize

Latest Videos

 

முதல்வரில் கவனம் எல்லாம் ஆட்சியில் இல்லை! பையன துணை முதல்வர் ஆக்குவதிலேயே இருக்கு! இறங்கிய அடிக்கும் அண்ணாமலை

ஆனால் சிலர் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நமது வீடு என்பது என்.டி.ஏ கூட்டணி. நமது வீட்டில் இருந்து வெளியேறியவர்கள் அது நமது வீடு இல்லை என்று சொன்னார்கள் அது அவர்களின் கருத்து. அதுவே வீடிட்ல் இருக்கும் நாம், வீட்டில் இருக்கும் நாம் எங்கள் வீட்டில் அவர்கள் இல்லை என்று ஏன் சொல்ல வேண்டும். அது நமக்கு தேவையில்லை.

வீட்டில் இருந்து உணவருந்தியவர்கள் வெளியே சென்று உணவு சரியில்லை காரம் அதிகம் என்றெலாம் சொன்னார்கள். 9 ஆண்டுகளாக அந்த காரத்தை பொறுத்து தான் சாப்பிட்டேன். இப்போது காரம் அதிகமாக தெரிந்துவிட்டது. அதனால் அந்த வீட்டில் சாப்பிட போவதில்லை என்று சொல்கிறார்கள்.

 

நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரன்? அப்படினா ஓபிஎஸ் மகன்?

நமது வீட்டில் உணவருந்தியவர்களை நாம் தவறாக பேசமாட்டோம். என்.டி.ஏ நாம் உருவாக்கிய கூட்டணி. 1998 முதல் 25 ஆண்டுகளாக இந்த கூட்டணியில் இருக்கிறோம். இதை மாதந்தோறும் வாரந்தோறும் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா? இந்த வீட்டுக்கென்று சிலர் வருவார்கள். வீட்டின் கதவு திறந்து தான் உள்ளது. இந்த வீட்டிற்கு விருந்தினர்கள் வரத்தான் செய்வார்கள்” என்று குறிப்பிட்டார்.

எனினும் தான் பேசிய போது அதிமுக என்ற வார்த்தையை அண்ணாமலை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!