Assembly: ரெடியாகும் ஜார்ஜ் கோட்டை..டிஜிட்டல் முறையில் சட்டமன்ற கூட்டத்தொடர்..

Published : Dec 13, 2021, 03:37 PM IST
Assembly: ரெடியாகும் ஜார்ஜ் கோட்டை..டிஜிட்டல் முறையில் சட்டமன்ற கூட்டத்தொடர்..

சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் ஜனவரி ஐந்தாம் நாள் ஆளுநர் உரையுடன் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் ஜனவரி ஐந்தாம் நாள் ஆளுநர் உரையுடன் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் தமிழக சட்டபேரவை கூட்டமானது கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது  புனித ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்று குறைந்துள்ளதால் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டமன்றம் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் கூட்டத்தொடரில் பங்கேற்கும் பேரவை உறுப்பினர்களுக்கு காகிதமில்லாத வகையில் 100% தொடுதிரை உதவியுடன் கணினி வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் பார்வையாளர்களை அனுமதிப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் அலுவல் குழு கூட்டத்தில் இதுக்குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்றும் பேரவை தலைவர் அப்பாவு கூறினார்.

வரும் ஜனவரி 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொது பட்ஜெட், மானியக் கோரிக்கை உள்ளிட்டவை விவாதிக்கப்படும் என்றும் கொரோனா விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார். இதற்காக கோட்டை வளாகம் கடந்த ஒரு மாத காலமாக புதுப்பிக்கப்பட்டதால் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

PREV
click me!

Recommended Stories

TVK VIJAY: விஜய்க்கு முதலமைச்சர் பாதுகாப்பு வாபஸ்.! ஆளுநரின் உத்தரவால் மாறிய அரசியல் களம்!
ஆர்.பி. சவுத்ரி உடலை பார்த்து தேம்பி அழுத விஜய்... ஜீவாவுக்கு ஆறுதல் சொன்ன தளபதி