கணிக்கப்பட்ட பஞ்சாங்கம்..! "அக்டோபரில் தண்ணீரில் மூழ்கப்போகும் தமிழகம்"..!

By thenmozhi gFirst Published Aug 18, 2018, 3:35 PM IST
Highlights

தமிழக எல்லைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லில் அதிக  தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது.

கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது.தற்போது கேரள மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அதன் தாக்கம் கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது.

தமிழக எல்லைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லில் அதிக தண்ணீர்  வந்துக்கொண்டிருக்கிறது.இது ஓர் பக்கம் இருக்க இந்த நிலையில் ஒரு பகீர் குண்டை போட்டுள்ளது பஞ்சாங்கம். கேரளாவை போலவே, தமிழகமும் தண்ணீரில் மூழ்கும் என புயல் ராமச்சந்திரன் கணித்து உள்ளாராம்.

அதன் படி, அக்டோபர் மாதத்திற்கு பிறகு, தமிழகத்தின் வட பகுதியான மதுராந்தகம் முதல் தென் தமிழகம் வரை மழையினால் அதிகம் பாதிக்கப்படும் என அவர் கணித்து உள்ளார். மேலும், தற்போது அடுத்து வரும் இரண்டு நாட்கள் அல்லது ஒரு வாரத்திற்கு மழை எப்படி இருக்கும் என மட்டும் கணிக்கிறது வானிலை ஆய்வு மையம். ஆனால் தற்போது கேரளாவில் ஏற்பட்ட்ட மாதிரி தமிழகத்திலும் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசு இபோது யூகித்துக் கொண்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்
 


மேலும் காவேரி ஆற்றில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும், அணைகள் உடைந்தாலும் அதனை உடனடியாக  சரி செய்து இப்போதிலிருந்தே என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். ஏற்கனவே 2015 ஆம்  ஆண்டு ஏற்பட்ட கடும்  வெள்ள பாதிப்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மேலும் ஒவ்வொரு ஆண்டும் அதன் இறுதி மாதங்களில் ஏதாவது ஒரு சோகம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்திற்கு தண்ணீரில் பாதிப்பு உள்ளது என புயல் ராமசந்திரன் கணித்து உள்ளார்.

click me!