கனமழை எச்சரிக்கை...! 5 மாவட்ட மக்களும் உஷார்..!

By thenmozhi gFirst Published Aug 18, 2018, 12:20 PM IST
Highlights

தமிழகத்தின் குறிப்பிட்ட 5 மாவட்டத்தில் மிகவும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் குறிப்பிட்ட 5 மாவட்டத்தில் மிகவும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை கேரளாவில் கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கியது. பின்னர் அடுத்தடுத்து கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு என மூன்று மாவட்டத்திலும் மழை அதிகமானது.

கடந்த மாதம் முழுவதும் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக கேரளாவில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. நிலசரிவில் சிக்கி மக்கள் பெரும் அவதிகுளாகி உள்ளனர். வீடுகள் தரை மட்டமாகி உள்ளன.

பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக மாறி உள்ளது.இந்நிலையில் கேரளாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல்,நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த ஐந்து மாவட்டத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளத்தால் இங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகக்கூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

click me!