பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மதிப்பெண் சான்றிதழ் எப்போது, எப்படி பெறலாம்..? அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Jun 20, 2022, 1:29 PM IST
Highlights

மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இன்று காலை 10 மணியளவில் 12 ஆம் வகுப்புக்கும் நண்பகல் 12 மணியளவில் 10 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை மாணவர்கள்,  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக்கொள்ளலாம். மேலும் பள்ளிகள், நூலகங்கள் வாயிலாகவும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றை பதிவிட்டால் எஸ்.எம்.எஸ் மூலம் மதிப்பெண்கள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்வில் 97.22 % பெற்று,  கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95% பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 

இந்நிலையில் ஜூன் 24 ஆம் தேதி முதல் இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதே போல் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 

மேலும் படிக்க: பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிப்பது எப்படி..? கலந்தாய்வு எப்போது.. ? முழு விவரம்..

click me!