பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிப்பது எப்படி..? கலந்தாய்வு எப்போது.. ? முழு விவரம்..

By Thanalakshmi VFirst Published Jun 20, 2022, 12:26 PM IST
Highlights

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியது. இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பத்தை மாணவர்கள் http:/www.tneaonline.org என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியது. இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பத்தை மாணவர்கள் http:/www.tneaonline.org என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மாணவர்கள் சொந்தமாகவோ அல்லது பள்ளிகள், அரசின் இலவச மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் கடந்த மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:வெளியான தேர்வு முடிவுகள்.. பிளஸ் 2 வில் 93.76 % தேர்ச்சி..10 ஆம் வகுப்பில் 90.07% தேர்ச்சி..
 
அசல் சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்ய ஜூலை 19 கடைசி நாளாகும். மேலும் அன்று பொறியியல் மாணவ சேர்க்கைகளுக்கான விண்ணப்ப பதிவும்  முடிவடைகிறது.

இதனை தொடர்ந்து விண்ணபித்த அனைத்து மாணவர்களுக்கும் ஜூலை 22 ஆம் தேதி சம வாய்ப்பு எண் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் ஜுலை 20 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தொடர்ந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் மாணவர்கள் சேவை மையம் வாயிலாக குறைகளை ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை சரிசெய்து கொள்ளலாம்.

கலந்தாய்வை பொறுத்தவரையில் மாற்றுதிறனாளி, முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கு ஆக.,16 முதல் ஆக.18 ஆம் தேதி நடைபெறும். பின்னர் பொதுகல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆக.22 முதல் 14 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். துணை கலந்தாய்வு அக். 15,16 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.
 

click me!