10ம் வகுப்பு தேர்வில் அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்.. எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சென்டம்? முழு விவரம் இதோ

By vinoth kumarFirst Published Jun 20, 2022, 11:41 AM IST
Highlights

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 90.07 சதவீத மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 90.07 சதவீத மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவை வெளியிட்டார். இதில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9,12,620 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதில், 4.27 லட்சம் (94.38%) பேர் மாணவிகள், 3.94 லட்சம் (85.83%) பேர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனைத்து பாடங்களிலும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி 97.22 சதவீதத்தடன் முதலிடத்திலும், அதற்கு அடுத்தப்படியாக 97.15 சதவீதத்துடன் பெரம்பலூர் மாவட்டமும் , 95.96 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 866 அரசுப்பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். 

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏராளமான மாணவர்கள் 100 மதிப்பெண்களையும் பெற்று அசத்தியுள்ளனர். அதில் அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 3,841 பேரும், கணிதத்தில் 2,186 பேரும், சமூக அறிவியலில் 1009 பேரும், ஆங்கிலத்தில் 45 பேரும், தமிழ் பாடத்தில் ஒரே ஒருவரும் நூறு மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர்.

click me!