'திருச்சி, நெல்லை கலெக்டர்கள் உள்பட 22 IAS அதிகாரிகள் மாற்றம்' தமிழக அரசு அதிரடி உத்தரவு...

 
Published : May 30, 2017, 07:31 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
'திருச்சி, நெல்லை கலெக்டர்கள் உள்பட 22 IAS அதிகாரிகள் மாற்றம்' தமிழக அரசு அதிரடி உத்தரவு...

சுருக்கம்

Tamillnadu Govt Action 22 IAS officers were transferred

திருச்சி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 22 IAS. அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிவந்த  மாவட்ட கலெக்டர்கள், துணை ஆணையர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக சாந்தா நியமிக்கப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட கலெக்டராக கே.ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டராக கே.எஸ்.பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.  

திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திருநெல்வேலியில் கலெக்டராக இருந்த கருணாகரன் வேளாண் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மீன் வளத்துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் நகர மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை புதிய செயலராக டேவிடார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  மீன்வளத்துறைக்கு புதிய ஆணையராக தண்டபாணி நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் பி. நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  மதுரை மாநகராட்சி ஆணையராக அனீஸ் சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!
தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு