
சென்னை ஐ.ஐ.டியில் மாட்டுக்கறி விழா ஏற்பாடு செய்த மாணவர் மீது குறிப்பிட்ட அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்று குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழாவை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், மாட்டுக்கறி திருவிழா நடத்த ஏற்பாடு செய்த அம்பேத்கர் ஆய்வு மைய மாணவர் சுராஜ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காரணம் மாட்டுக்கறி திருவிழா நடைபெற்ற போதே இரு அமைப்புகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த கருத்து வேறுபாடு கைகலப்பில் முடிவடைந்துள்ளதாக தெரிகிறது.