'ஐடி ரெய்டுக்கு பயந்து அதிமுக அரசு இதையெல்லாம் செய்கிறது' - எடப்பாடி அரசை நாறடித்த அமீர்...

 
Published : May 30, 2017, 07:15 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
'ஐடி ரெய்டுக்கு பயந்து அதிமுக அரசு இதையெல்லாம் செய்கிறது' - எடப்பாடி அரசை நாறடித்த அமீர்...

சுருக்கம்

Amir has condemned ADMK Govt regards Thirumurugan Gandhi detained under Goondas act

ஆண்டு தோறும் நடந்து கொண்டிருந்த ஈழத்தமிழர் அஞ்சலி நிகழ்ச்சிக்கு தடை ஆனால் நடைபெறாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இங்கே என்ன நடக்கிறது?  அதிமுக ஐடி ரெய்டுக்கு பயந்து இதையெல்லாம் செய்கிறது என்று அமீர் குற்றம்சாட்டினார். என செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்துள்ளார் இயக்குனர் அமீர்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்து ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது  மூவர் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து அவரை வெளியே வர முடியாமல் அட்டூழியம் செய்துள்ளது. 
இதனால் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திரைப்பட இயக்குநர்கள் சார்பில் இன்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து இயக்குநர் அமீர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது :

ஆண்டு தோறும் நடந்து கொண்டிருந்த ஈழத்தமிழர் அஞ்சலி நிகழ்ச்சிக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடைபெறாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? 500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சான்றுகளையே ஐரோப்பியர்கள் பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள். ஆனால் இங்கு 2500 ஆண்டுகளுக்கு முன் நாகரிகமாக வாழ்ந்து முன்னோடியாக திகழும் தமிழன் வரலாற்றை வேக வேகமாக மண் போட்டு மூடி விட்டார்கள்.

மக்கள் எதை வேண்டும் என்று கேட்கின்றார்களோ அதை மூடிவிடுகிறார்கள். எது வேண்டாம் என்று சொல்கின்றனரோ அதனை திறக்கிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது, இது உங்களுக்கே அநியாயமாக இல்லையா? ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்யக்கோரி மக்கள் குரல் எழும்பியும் என்ன பலன்? மத்திய அரசுக்கு பயந்து அதிமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், பாஜக கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக ஐடி ரெய்டுக்கு பயந்து இதையெல்லாம் செய்கிறது என்று அமீர் குற்றம்சாட்டினார்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!