தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க இதுதான் காரணமா?

Published : Feb 14, 2025, 08:57 AM ISTUpdated : Feb 14, 2025, 01:34 PM IST
 தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க இதுதான் காரணமா?

சுருக்கம்

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி, 2026 தேர்தலை இலக்காகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு வருகிறது. 

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடிகர் விஜய் தொடங்கினார். அதன் பிறகு கடந்தாண்டில் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் மாநாட்டை விஜய் நடத்தி திராவிட கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தார். அது மட்டுமல்லாமல் மாநாட்டில் யாரும் எதிர்பாராத விதமாக ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். 

மேலும் போகும் இடமில்லாமல் திமுகவை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இவரது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் என்பதால் கட்சியை கட்டமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமித்தார். அக்கட்சியின் தேர்தல் வியூக பணிகளை ஜான் ஆரோக்கியசாமி கவனித்து வருகிறார். கட்சியில் புதிதாக இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதென்ன Y பிரிவு பாதுகாப்பு? விஜய்க்கு திடீரென வழங்கப்பட்டது ஏன்? அதன் சிறப்பம்சங்கள் என்ன?

மேலும்  பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் - விஜய் இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் தற்போது தவெக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகளை செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய்க்கு பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொள்வார் என்பதால் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை வழங்கியுள்ளது. அதன்படி விஜய்யின் Y பிரிவில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு அதிகாரிகள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 காவலர்கள் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.  அவருக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கப்படும். இந்த பாதுகாப்பானது, தமிழகத்தில் மட்டும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: குஷியோ குஷி! மார்ச் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை!

சமீபத்தில் விஜய் மேற்கொள்ள போகும் பயணங்களில் முட்டை அடிக்க வேண்டும் என்று சில நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் நடந்த குழு உரையாடல்களில் பேசியது டிரெண்டான நிலையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!