
சபரிமலை பக்தர்கள் வேன் விபத்து
நாள்தோறும் வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கி பல உயிர்கள் பரதாபமாக பறிபோகிறது. இந்த நிலையில் ஓசூரில் இருந்து 10க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். உதனையடுத்து பல்வேறு இடங்களை சுற்றிபார்த்து விட்டு மீண்டும் சொந்த ஊர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
நேற்று இரவு 10 மணியளவில் சுற்றுலா வேன் தேனி அன்னஞ்சி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது,எதிரே சேலத்தில் இருந்து தேனி நோக்கி வந்த தனியார் சுற்றுலா பேருந்தும், சுற்றுலா வேனும் தேனி அன்னஞ்சி புறவழிச் சாலையில் உள்ள தனியார் மில் அருகே நேருக்கு நேர் பயங்கர வேகத்தில் மோதிக்கொண்டது.இதில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தன.
இந்தக் கோர விபத்தில் ஓசூர் தேர்ப்பேட்டையைச் சேர்ந்த கணேஷ் (7) என்ற சிறுவன்,மற்றும் நாகராஜ் (40)மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பட்டாபள்ளியைச் சேர்ந்த சூர்யா (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து 3 பேர் பலி
மேலும் இந்த விபத்தில் சுற்றுலா வேன் மற்றும் சுற்றுலா பேருந்தில் வந்த சேலம் மாவட்டம் சங்ககரியை சேர்ந்த ராஜேந்திரன் (54),வசந்தா(62),சித்தாயி (65)சுந்தரம்மாள்(58) செல்வி (44) பழனியம்மாள் (55) மற்றொரு பழனியம்மாள்(49) விஜயா (65) சோமசுந்தரம் (52) ஓசூரைச் சேர்ந்த ராமன்,சண்முகராஜா (25),பாரத் (23)சசிதரன் (25),கவின் (13), ஆகிய 14 பேர் படுகாயம் அடைந்தனர். அல்லிநகரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்டவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மூன்று பேரின் உடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சபரிமலைக்கு சென்று திரும்பி சுற்றுலா வேன் தனியார் சுற்றுலா பேருந்துடன் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்ததுடன்,14 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் தேனி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.