மாணவர்களே அலர்ட் !! இனி 2ஆம் ஆண்டு செமஸ்டரில் தமிழ் கட்டாயம்.. எந்தெந்த பிரிவுகளுக்கு தெரியுமா..?

By Thanalakshmi VFirst Published Oct 15, 2022, 11:22 AM IST
Highlights

தமிழகத்தில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ படிப்புகளில் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

இதுக்குறித்து  உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பிகாம், பிபிஏ, பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை. 

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நடைமுறையை பின்பற்றக்கூடிய வகையில் இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம்பெற வேண்டும்.

மேலும் படிக்க:விளையாடிய போது அடுத்தடுத்து குளத்தில் தவறி விழுந்த 3 சிறுவர்கள்.. நீரில் மூழ்கி பலியான சோகம்..!

ஏற்கெனவே இந்த பாடப்பிரிவுகளில் முதலாமாண்டில் தமிழ் பாடத்தேர்வு இருக்கிறது. இரண்டாம் ஆண்டில் கிடையாது. தற்போது இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் பாடத்தேர்வு இருக்க வேண்டும். 

 நடப்பு கல்வியாண்டிலேயே இந்த புதிய முறையை அமல்படுத்த வேண்டும். அதாவது அடுத்த செமஸ்டர் தேர்வு எப்போது நடைபெறுகிறதோ அதிலிருந்தே இந்த உத்தரவு நடைமுறைக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:இந்தியை திணிக்க மீண்டும் முயற்சித்தால் டெல்லிக்கே வந்து போராடுவோம்.. அமித்ஷாவை எச்சரித்த உயதநிதி.

click me!