மகளிர் ஆணையம் திருத்தியமைப்பு..அவசர அவசரமாக மாற்றப்பட்ட தலைவர்.. திடீர் கலைப்பிற்கு காரணம்..?

By Thanalakshmi VFirst Published Feb 17, 2022, 11:46 AM IST
Highlights

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டு இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாநில மகளிர் ஆணையத்தில் புதிய தலைவராக எஸ்.குமாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டு இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாநில மகளிர் ஆணையத்தில் புதிய தலைவராக எஸ்.குமாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மூன்றாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் ஆணைய நிர்வாகிகளை அவர்களது பணிகாலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், சத்தமின்றி வெளியேற்றிய தமிழக அரசு விளம்பரம் கூட வெளியிடாமல் விண்ணப்பம் வாங்காமல் அவசர அவசரமாக புதிதாக தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்துள்ளதாக சொல்லபடுகிறது.

கடந்த பிப். 2021 ல் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவி காலம் மூன்றாண்டுகள்.தமிழ்நாடு மகளிர் ஆணைய சட்டப்படி ஆணையத்தை கலைக்கவோ, திருத்தி அமைக்கவோ முடியாது என்று விதிகள் உள்ளது. உறுப்பினர்கள் பதவி காலம் முடிவதற்கு இன்னும் இரண்டாண்டுகள் இருக்கும் நிலையில் தமிழக அரசு அவசர அவசரமாக அவர்களை பதவியில் இருந்து அனுப்பிவிட்டு ஆணையத்தையும் திருத்தி அமைத்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கான காலிப்பணியிடம் குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.அதன்பின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு பிறகு தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இது தான் நடைமுறை.தற்போதைய ஆட்சியில் இந்த நடைமுறை அப்பட்டமாக நீக்கப்பட்டு விளம்பரம் வெளியிடாமல் விண்ணப்பங்கள் பெறாமல் பிப். 11ல் புதிதாக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டு இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாநில மகளிர் ஆணையத்தில் புதிய தலைவராக எஸ்.குமாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆணையத்தின் உறுப்பினர்களாக, டாக்டர் மாலதி நாராயணசாமி, கீதா நடராஜன்,சீதாபதி, பவானி ராஜேந்திரன்,ராணி ஆகியோருடன் சட்டபேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, வரலட்சுமி ஆகியோரை நியமனம் செய்துள்ளனர். 

click me!