அலர்ட்..! பொதுத்தேர்வு அப்டேட்..திருப்புதல் தேர்வை முடித்த கையோடு அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை..

Published : Feb 17, 2022, 11:17 AM IST
அலர்ட்..! பொதுத்தேர்வு அப்டேட்..திருப்புதல் தேர்வை முடித்த கையோடு  அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை..

சுருக்கம்

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் திருப்புதல் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் பொதுத்தேர்வுக்கு கணக்கில்கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித் துறை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.  

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் திருப்புதல் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் பொதுத்தேர்வுக்கு கணக்கில்கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித் துறை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக பொதுத்தேர்வு இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் நோய் தொற்று காரணமாக குறைந்த நாட்களே பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களின் நலன்கருதி பொதுத்தேர்வுக்கு முன்னதாகவே அதன் மாதிரி தேர்வாக திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 9-ம் தேதிமுதல் இந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல்திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனிடையே திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக நடத்திய விசாரணையில்,வந்தவாசி மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள இரு வெவ்வேறு தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வினாத்தாள்களே கசிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து,நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் குற்றச்சாட்டிக்குள்ளான இரு தனியார் பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, ‘‘பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களை அதற்குத் தயார்படுத்தவே 2 திருப்புதல் தேர்வுகளை, பொதுத்தேர்வு போன்றே நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் திருப்புதல் தேர்வு முடிந்த நிலையில், 2-வது திருப்புதல் தேர்வு விரைவில் நடத்தப்படும். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடைபெறும்.

திருப்புதல் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் பொதுத்தேர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. எனவே, மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட வேண்டாம், மாணவர்களை பொதுத்தேர்வு எழுத ஒரு அடிப்படை பயிற்சியாக மட்டுமே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது’’ என்று சொல்லப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!