TN Rain : இன்றும் மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு அதிகம்? வானிலை ஆய்வு மையம் தகவல்!

By Ansgar R  |  First Published Jun 6, 2024, 11:57 PM IST

Tamil Nadu Rain Update : இன்று தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நல்ல மழை வெளுத்துவங்கிய நிலையில், நாளையும் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.


தமிழகம் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது குறிப்பிடத்தக்கது. வெயிலின் தாக்கம் இந்த முறை அதிகமாக இருந்ததால் இந்த மழை ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது. 

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் தொடர்ச்சியாக பெய்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

Theft: கள்ளக்குறிச்சியில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க காசு மாயம்; பெண் பக்தைக்கு வலைவீச்சு

இன்றும் தஞ்சை, திருச்சியில் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரத்தில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அடைமொழி பெய்த நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் நாளை ஜூன் 7ம் தேதியும் இந்த மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. 

அதன்படி கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிடங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில் நாளை மறுநாள் ஜூன் 8-ம் தேதியும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த மழையானது வருகின்ற ஜூன் மாதம் 10ம் தேதி வரை தொடர வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையானது 35 முதல் 36 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் கனவில் காரில் சென்ற வாலிபர்; திடீரென கொழுந்துவிட்டு எரிந்த கார் - தேனியில் பரபரப்பு

click me!