மணலூர்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவிலில் சாமி சிலையில் இருந்த தங்க காசுகளை திருடி சென்ற பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையில் பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலில், நேற்று காலை பூஜை செய்வதற்காக அர்ச்சகர் கோவிலை திறந்து கருவறைக்குச் சென்றபோது அங்கு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி கழுத்தில் நிரந்தர சாற்றுப்படியாக அணிவிக்கப்பட்டிருந்த நான்கு கிராம் தங்க காசுகள் காணாமல் போய் இருப்பது தெரிந்தது.
ஆடா? முடிந்தால் என் மீது கை வையுங்கள்; திமுகவினருக்கு அண்ணாமலை பகிரங்க சவால்
undefined
இதனைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் கோவில் செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில், கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, கடந்த ஒன்றாம் தேதி காலை 6 மணி அளவில் கோவிலின் உள்ளே சாமி கும்பிடுவது போல் புகுந்த பெண் ஒருவர்,
Ramadoss: ஜூலை 1 முதல் தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமல்? அரசுக்கு இராமதாஸ் கோரிக்கை
யாரும் வராததை உறுதி செய்த பின்னர், வேகவேகமாக கருவறையின் உள்ளே சென்று சாமி கழுத்தில் அணிவித்திருந்த தங்க காசுகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, கோவிலின் செயலாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மணலூர்பேட்டை போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.