கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார், 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் ஆற்று மேம்பாலம் அருகில் சென்றபோது முன்னாள் சென்னையில் இருந்து சேலம் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தின் காரணமாக சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் வரை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து மற்றும் தீயணைப்பு போலீசார் விபத்தில் சிக்கியர்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
undefined
இதனைத் தொடர்ந்து போக்குவரத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் விபத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் சென்ற லாரி மீது தனியா சொகுசு பேருந்து மோதி விபத்துக் குள்ளானதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்துக்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆன்லைன் செயலில் பணத்தை இழந்த தம்பதி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி; திருப்பூரில் 6 வயது சிறுமி பலி
இதே போன்று உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்னையில் இருந்து பாடி கட்டுவதற்காக கேரளா சென்ற லாரி மீது சென்னையில் இருந்து தஞ்சாவூர் சென்ற கார் அதிவேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், ஓட்டுநர் சிவகுமார் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த இரண்டு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.