
சுமார் 19 ஆண்டுகள் முன்பு இதே நாள், அதாவது டிசம்பர் 26 2004ம் ஆண்டு, அன்று ஞாயிற்று கிழமை என்பதால், சிற்ஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடிய மக்கள் ஞாயிற்று கிழமையை இனிமையாக கழிக்க பல இடங்களுக்கு சென்றனர். குறிப்பாக இயற்கை நமக்களித்த அழகிய இடமான கடற்கரைக்கும் சென்று வந்தனர். அப்போது சுமத்ரா என்ற தீவின் அருகே பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுமத்திராவின் அந்த பகுதியில் கடந்த சில நூற்றாண்டில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அதன் பெரும் பகுதி நீருக்குள் சென்றுவிட்டது என்றே கூறுகின்றனர். அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது சகஜம் தான் என்றாலும் அது தமிழகத்திற்கு புதிது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் சுமார் 14 நாடுகளின் கடற்கரையில் ஆழிப்பேரலைகளை ஏற்படுத்தியது.
அதேபோல ஒரு அலை தமிழகத்தின் பல கடலோர பகுதிகளை தாக்கியது, வேளாங்கண்ணி, நாகூர், கன்னியாகுமரி துவங்கி சென்னை மெரினா வரை பல கடற்கரைகளில் 30 அடிக்கும் மேல் உயர்ந்த அலைகள் கூட்டமாக குடியிருந்த மக்களை விழுங்கி சென்றது. ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 10,000திற்கும் அதிகமான மக்கள் இறந்தனர். தமிழகம் எங்கும் மரணஓலங்கள் எழுந்தது, இதில் நகைப்பாட்டினத்தில் தான் 6000திற்கும் அதிகமான மக்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு நடந்து 19 ஆண்டுகள் கடந்துவிட்டது என்றாலும் கூட இன்றளவும் தங்கள் சொந்தங்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் வாடி நிற்கும் உறவுகள் பல. தமிழக மக்கள் மனதில் நீங்காத, ஆறாத ஒரு வடுவாகி சென்றுள்ளது இந்த டிசம்பர் 26ம் நாள். கடலுக்கு தங்கள் குடும்பத்தை தாரைவார்த்தவர்கள், இறுதி சடங்கு செய்ய அவர்கள் உடல் கூட கிடைக்காமல், கடலில் மலர் தூவி துக்கத்தை இன்று அனுசரித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி.? முக்கிய முடிவு எடுக்க இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு
பல்லாயிரம் கோடி ரூபாய் சேதத்தை ஏற்படுத்திய இந்த சுனாமி பேரலை காரணமாக சென்னை 200க்கும் அதிகமான மக்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது. அன்று நாம் கற்றுக்கொண்ட பாடம் பல புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. ஆழிப்பேரலைகளை அதன் பிறகு நாம் சந்திக்கவில்லை என்றாலும் அதன் பிடியில் இருந்து தப்ப பல்வேரு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.