TNPSC Group 2 Mains Result 2024: குரூப் 2 2a தேர்வு முடிவுகள் வெளியீடு; ரிசல்ட் அறிந்து கொள்வது எவ்வாறு?

Published : Jan 11, 2024, 01:52 PM ISTUpdated : Jan 11, 2024, 05:07 PM IST
TNPSC Group 2 Mains Result 2024: குரூப் 2 2a  தேர்வு முடிவுகள் வெளியீடு; ரிசல்ட் அறிந்து கொள்வது எவ்வாறு?

சுருக்கம்

குரூப் 2 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், இந்த தேர்வில் 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர், இந்தநிலையில் இந்த தேர்வு முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது

குரூப் 2 தேர்வு முடிவு வெளியானது

அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்றது.  இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதினர். நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன. 161 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,990 பதவிகளுக்கும் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி.?

இந்தநிலையில் குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவை தெரிந்து கொள்ளதேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்., அதில் தேர்வு முடிவுகள் பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட்டு, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

OPS vs EPS : குழப்பம் ஏற்படுத்தி குளிர் காய நினைத்த ஓபிஎஸ்க்கு இறைவன் கொடுத்த தண்டனை- விளாசும் ஜெயக்குமார்


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு
மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?