Annamalai Slammed Seeman : என் மண் என் மக்கள் யாத்திரையில் உள்ள தமிழக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அவர்கள், இன்று மாலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
விலவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி போன்று கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது என்று பேசினார். போதைப்பொருள் கடத்தலில் திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் இருப்பது தெரியவந்துள்ளது என்றும், ஜாபர் சாதிக், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொடங்கி, உதயநிதி ஸ்டாலின் வரை அவரது குடும்பத்திற்குள் தயாரிப்பாளராக தமிழகத்தின் டிஜிபியின் கையிலயே கேடயம் விருதுவாங்கியுள்ளார் என்று கூறினார்.
2000 கோடி ரூபாய் மதிப்பு போதை பொருள் கடத்தி பிடிபட்டிருக்கிறார்கள் என்றால் அந்த பணம்தான் இவர்கள் தயாரிக்கும் படங்களுக்கு கூட செல்கின்றதா என்ற சந்தேகம் வருகிறது. திமுக முதலமைச்சரின் குடும்பம் சினிமாவில் திரைப்படங்களை வெளியிட்டுவருகிறது. தற்போது அவசரஅவசரமாக கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள்.
undefined
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா பழக்கம் அதிகரித்து வந்துள்ளது, 2000 கோடி மதிப்புள் போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளது. தமிழகத்தில் அரசு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது, போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எப்படி டிஜிபியிடம் விருது வாங்க முடியும். இது தொடர்பாக முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். டெல்லி காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
இந்த கும்பல் குறித்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். முதலமைச்சர் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை என்றார் அவர். 232 தொகுதிகளில் "என் மண் எண் மக்கள்" யாத்திரை நிறைவு பெற்றிருக்கிறது. பல்லடத்தில் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மதுரை நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்
2024 இன்று பாராளுமன்ற தேர்தலில் இதன் தாக்கம் இருக்கும் அதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது பெரிய பிக்சாட்டுகள் உள்ளது. தொண்டர்களை கஷ்டப்பட்டு அதிமுகவினர் வலை போட்டு சேர்க்கின்றனர். கூட்டணி பங்கீடு குறித்து திமுக பேசிவருவது என்பது திமுக WARM UP பண்ணிக் கொண்டிருக்கிறது வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றியாளர் யார் என்பது தெரியும்.
நோட்டு பெட்டிக்கும் ஓட்டு பெட்டிக்கும் சீமான் அண்ணன் சுற்றுவது போல தெரிகிறது. மத்திய நிதி அமைச்சரின் வார்த்தைகளில் எந்த தவறும் இல்லை சில மனிதர்களுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும் போது எங்களது பாசைகளும் அதன் பெயரிலே இருக்கும் என்றார் அவர்.
மணமகன் வீட்டாரின் எதிர்ப்பு.. காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற காதல் திருமணம் - வாழ்த்திய உறவினர்கள்!